ஆப்நகரம்

சென்னை சிறுவனுக்காக ‘தல’ தோனி செய்த செயல்!!

மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் பட்டம் வென்று, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள சென்னை சிறுவனை இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

Samayam Tamil 18 Jan 2018, 10:34 am
மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் பட்டம் வென்று, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள சென்னை சிறுவனை இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ms dhoni met a two and an half year old chennai boy who became youngest cricketer
சென்னை சிறுவனுக்காக ‘தல’ தோனி செய்த செயல்!!


சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்ய தேவ். கையில் கிடைக்கும் எதையும் பேட்டாக கருதி, தூக்கி போடும் எதையும் சிக்சராக விளாசும் திறமை கொண்டவன் சனுஷ். சனுஷின் இந்தத் திறமையின் அடிப்படையில் அவருக்கு மிக இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கிடைத்தது. இதன்மூலம், இந்திய சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்தார்.

இதைப்பற்றி அறிந்த கிரிக்கெட் வீரர் தோனி, அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் நேரில் சந்தித்தார். சனுஷில் பேட்டிங் திறமையை பார்த்து வியந்த தோனி, எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வளர சனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்