ஆப்நகரம்

லுங்கி டான்சில் பிரபுதேவாவை தோற்கடித்த தல தோனி; இது வைரல் வீடியோ பாஸ்...!

கடந்த ஆண்டு விளம்பரம் ஒன்றில் நடித்த தோனி, லுங்கி டான்ஸ் கற்ற போது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TNN 21 May 2017, 4:38 pm
மும்பை: கடந்த ஆண்டு விளம்பரம் ஒன்றில் நடித்த தோனி, லுங்கி டான்ஸ் கற்ற போது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil ms dhoni trying to learn lungi dance from prabhu deva is the best thing youll see today
லுங்கி டான்சில் பிரபுதேவாவை தோற்கடித்த தல தோனி; இது வைரல் வீடியோ பாஸ்...!


கிரிக்கெட்டின் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. அவர் சிறந்த நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டாக களத்தில் திகழ்கிறார். உலகின் சிறந்த அணியை கட்டமைப்பதில் வல்லவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்நிலையில் கடந்த விளம்பரம் ஒன்றில் தோனி நடித்தார். அதற்காக நடிகர் பிரபுதேவாவிடம் நடனம் கற்றார். இருவரும் சேர்ந்து நடனமாடி வெளியிட்ட அந்த விளம்பரம் மிகவும் பிரபலமானது. இந்த சூழலில் பிரபுதேவாவிடம் தோனி நடனம் கற்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.



அதில் லுங்கியை கட்டிக் கொண்டு, பிரபுதேவா ஆட அதைப் பார்த்து ஆடும் தோனியை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் ஒரு விருந்து என்று தான் சொல்லக்கூடும்.

MS Dhoni Trying To Learn 'Lungi Dance' From Prabhu Deva Is The Best Thing You'll See Today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்