ஆப்நகரம்

தோனியை எப்போ களமிறக்க... கோலி குழப்பம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது தோனியை எந்த பொசிஷனில் களமிறக்குவது என கோலி குழப்பத்தில் உள்ளார்.

TOI Sports 15 Jan 2017, 12:58 pm
புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது தோனியை எந்த பொசிஷனில் களமிறக்குவது என கோலி குழப்பத்தில் உள்ளார்.
Samayam Tamil ms dhonis role and the middle muddle
தோனியை எப்போ களமிறக்க... கோலி குழப்பம்


கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் செயல்பட உள்ள கோலி, முன்னாள் கேப்டன் தோனியை எந்த பொசிஷனில் களமிறக்குவது என ஆலோசனை நடத்தி வருகின்றார்.



இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களமிறங்க தோனி, யுவராஜ் சிங், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதேவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இவர்களில் தோனி 4-7 வது இடத்தில் இறங்கலாம் என தெரிகிறது.

தோனி 6-7 வது இடத்தில் இதுவரை இறங்கினார். அவரின் பேட்டிங் நம்மால் அதிக முறை ரசிக்க முடியவில்லை. இதனால் 4வது இடத்தில் களமிறங்கினால் அவர் மிக கூலாக பேட்டிங் செய்வதை பார்த்து ரசிக்கலாம் என கோலி கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

அதே போல் வேக பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை பும்ரா,உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். இவர்களில் இருவரை டாஸ் போடும் முன் கோலி தெரிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்