ஆப்நகரம்

‘யார் சாமி நீ’…13 இன்னிங்ஸ்களில் 6 முறை…150+ ரன்கள்: வியக்க வைக்கும் இந்திய இளம் பேட்ஸ்மேன்!

இந்திய இளம் பேட்ஸ்மேன் ஒருவர் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 6 முறை 150+ ரன்களை குவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jun 2022, 7:29 am
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை, உத்தரகாண்ட் அணிகள் மோதி வருகின்றன.
Samayam Tamil சர்ஃபரஸ் கான்


இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதல்நாள் முடிவில் 304/3 ரன்களை சேர்த்திருந்தது. அறிமுக வீரர் பார்கர் (104), சர்ஃபரஸ் கான் (69) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சர்ஃபரஸ் முதலிடம்:


இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து பார்கர், சர்ஃபரஸ் கான் இருவரும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இறுதியில் சர்ஃபரஸ் கான் 140 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து சதமெடுத்தார். இதன்மூலம், இந்த வருட ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் மாறினார். மொத்தம் 4 போட்டிகளில் ஒரு சதம், 3 சதம், ஒரு அரை சதம் என மொத்தம் 704 ரன்களை குவித்து, முதலிடத்தை பிடித்துள்ளார்.

மும்பை டிக்ளேர்:

மறுமுனையில் அறிமுக வீரர் பார்கர் 447 பந்துகளில் 252 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 687/8 ரன்களை குவித்து டிக்ளேர் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் அணி 39/2 ரன்கள் சேர்த்திருக்கும் நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

சர்ஃபரஸ் ரெக்கார்ட்:

ரஞ்சிக் கோப்பையில் கடந்த 13 இன்னிங்ஸ்களில் 6 முறை 150+ ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அதில் ஒரு முச்சதம், 2 இரட்டை சதங்களும் அடங்கும். இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ஃபரஸ் கானுக்கு விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ரஞ்சி போட்டியில் சர்பரஸ் கான், கடந்த 13 இன்னிங்ஸ்களில்:

71* (140)

36 (39)

301* (391)

226* (213)

25 (32)

78 (126)

177 (210)

6 (9)

275 (401)

63 (110)

48 (72)

165 (181)

153 (205)

அடுத்த செய்தி

டிரெண்டிங்