ஆப்நகரம்

முன்ரோ ‘மெர்சல்’ சதம் : இந்தியாவுக்கு 197 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் முன்ரோ அதிரடி சதம் விளாச அந்த அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.

TOI Sports 4 Nov 2017, 8:31 pm
ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் முன்ரோ அதிரடி சதம் விளாச அந்த அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
Samayam Tamil munro blast century india need 197 runs to seal the t 20 series against new zealand
முன்ரோ ‘மெர்சல்’ சதம் : இந்தியாவுக்கு 197 ரன்கள் இலக்கு!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது.

கட்டாய வெற்றி:
இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (45) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் வந்த கேப்டன் வில்லியம்சன் (12) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

முன்ரோ அதிர்ஷ்டம்:
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பல முறை அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்ற முன்ரோ, சிக்சர்களும், பவுண்டரியுமாக பறக்கவிட்டு டி-20 அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி, 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. முன்ரோ (109), புரூஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்