ஆப்நகரம்

Rohit Paudel: முதல் அரைசத்திலேயே சச்சின் சாதனையை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்

நேபாளம் பேட்ஸ்மேன் ரோகித் பவுடல், தனது முதல் அரைசதத்திலேயே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

Samayam Tamil 26 Jan 2019, 8:40 pm
நேபாளம் பேட்ஸ்மேன் ரோகித் பவுடல், தனது முதல் அரைசதத்திலேயே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
Samayam Tamil Rohit Paudel.


நேபாளம் நாட்டை சேர்ந்த பேட்ஸ்மேன் ரோகித் பவுடல், தனது 16 வயதில் சர்வதேச முதல் அரைசதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

மிக இளம் வயதில் சர்வதேச அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை சச்சின் இத்தனை காலமாக தக்க வைத்திருந்தார். சச்சின் தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பாகிஸ்தானுக்கு எதிராக 16 வயது 213 நாட்கள் இருக்கும் போது அடித்திருந்தார்.


இந்நிலையில் நேபாள் வீரர் ரோகித் பவுடல் தனது 16 வயது 146 நாட்கள் இருக்கும் போது ஐக்கிய அரபு அணிக்கு எதிராக அடித்து சச்சின் சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார்.

ரோகித் பவுடல் 58 பந்தில் 7 பவுண்டரிகள் விளாசி 55 ரன்கள் எடுத்து இந்த சாதனையை செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்