ஆப்நகரம்

நியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு!

புதுடெல்லி: நியூசிலாந்தின் ஆடுகளங்களின் தன்மை கடந்த சில ஆண்டுகளாகவே மாறிவிட்டதாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jan 2020, 8:19 pm
நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் வரும் 24ஆம் தேதி துவங்குகிறது.
Samayam Tamil Sachin Tendulkar

இத்தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவினர் பெங்களூருவில் இருந்து கிளம்பினர். இன்னொரு பிரிவு வீரர்கள் இன்று இரவு கிளம்புகின்றனர்.

தரையிறங்கிய கோலி
இந்நிலையில் கோலி தலைமையிலான ஒருபிரிவு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏற்கனவே நியூசிலாந்தில் தரையிறங்கினர். நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை குறித்து ஜாம்பவான் சச்சின் கணித்துள்ளார். இதுகுறித்து சச்சின் கூறுகையில், “சமீபகாலமாக நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் அதிக ரன்கள் எடுத்த போட்டிகள். ஆடுகளத்தின் தன்மைகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

ஒவ்வொரு முறையும்
கடந்த 2009இல் நடந்த தொடர் எனக்கு நினைவில் உள்ளது. ஹாமில்டன் ஆடுகளம் நியூசிலாந்தின் மற்ற ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நேபியர் ஆடுகளம் மிகவும் கடினமானது. கடந்த 1990 முதல் 2009 வரையிலான எனது ஒவ்வொரு நியூசிலாந்து பயணத்தின் போதும் நேபியர் ஆடுகளத்தின் தன்மை ஒவ்வொரு முறையும் கடினமாக மாறிக்கொண்டே சென்றது.

தேவையான பலம்
தற்போதைய இந்திய அணியில் பவுலிங் மிகவும் பலமாக காணப்படுகிறது. வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு இரண்டும் சமபலத்துடன் உள்ளன. அதனால் நியூசிலாந்து அணியை சமாளிக்கத் தேவையான பலம் இந்திய அணியிடம் உள்ளது” என்றார்.

தொடர் அட்டவணை
டி-20 போட்டிகள்

ஜனவரி 24 - முதல் டி-20, ஆக்லாந்து - நண்பகல் 12:20 மணி
ஜனவரி 26 - இரண்டாவது டி-20, ஆக்லாந்து - நண்பகல் 12:20 மணி
ஜனவரி 29 - மூன்றாவது டி-20, ஹாமில்டன் - நண்பகல் 12:30 மணி
ஜனவரி 31 - நான்காவது டி-20, வெலிங்டன் - நண்பகல் 12:30 மணி
பிப்ரவரி 2 - ஐந்தாவது டி-20, மவுண்ட் மாவுங்கானி - நண்பகல் 12:30 மணி

ஒருநாள் போட்டிகள்
பிப்ரவரி 5 - முதல் ஒருநாள், ஹாமில்டன் - காலை 7:30 மணி
பிப்ரவரி 8 - இரண்டாவது ஒருநாள், ஆக்லாந்துது - காலை 7:30 மணி
பிப்ரவரி 11 - மூன்றாவது ஒருநாள், மவுண்ட் மாவுங்கானி - காலை 7:30 மணி

டெஸ்ட் போட்டிகள்
பிப்ரவரி 21 -25 - முதல் டெஸ்ட், வெலிங்டன் - அதிகாலை 4:00 மணி
பிப்ரவரி 29 -மார்ச் 4 - இரண்டாவது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச் - அதிகாலை 4:00 மணி

அடுத்த செய்தி

டிரெண்டிங்