ஆப்நகரம்

டி20 மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்து வெற்றி

டி20 மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது

TNN 21 Mar 2016, 8:41 pm
நாக்பூர்: டி20 மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
Samayam Tamil newzealand eves beat australia by 6 wickets in t20 world cup match
டி20 மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்து வெற்றி


ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், ஆரம்பத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் எதிர்பார்த்த அளவிற்கு ரன் குவிப்பு செய்ய முடியவில்லை.

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்ய்ஷே பெர்ரி மட்டும் நிலைத்து நின்று ஆடி 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்களை இழந்து 103 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீராங்கனை கேஸ்பேரக் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

தனது ரன் குவிப்பை நம்பிகையுடன் துவக்கிய நியூசிலாந்து அணி, முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீராங்கனை பிரிஸ்ட் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்