ஆப்நகரம்

பெஸ்ட் டி20 XI இதுதான்: ஐசிசி கணிப்பு...கேப்டனாக பாபர் அசாம்...இந்தியாவுக்கு ‘நோ’!

2021ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் லெவன் அணியை ஐசிசி கணித்து வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 20 Jan 2022, 6:44 am
2021ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் லெவன் அணியை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள்தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்.
Samayam Tamil கோலி, பாபர் அசாம், ரிஸ்வான்


ஓபனர்கள்:

கடந்த ஆண்டில் 14 டி20 போட்டிகளில் 589 ரன்கள் சேர்த்த இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், 1326 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோரை ஓபனர்களாக, ஐசிசி தேர்வு செய்துள்ளது.

நடுவரிசை:

3ஆவது இடத்திற்கு பாபர் அசாம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கேப்டனும் இவர்தான். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்கரம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இருக்கின்றனர். பினிஷருக்கான இடத்தில் டேவிட் மில்லர் இருக்கிறார்.

பௌலர்கள்:

ஸ்பின்னர்களுக்கான இடங்களில் தென்னாப்பிரிக்காவின் ஷாம்ஸி, இலங்கையின் வனிந்து ஹசரங்காவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட், வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரீதி ஆகியோர் உள்ளனர்.

இந்த அணியில் அதிகபட்சமாக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் இருக்கிறார்கள். கேப்டன் பதவியையும் அந்த நாடுதான் கைப்பற்றியுள்ளது. இந்த அணியில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2021-ன் பெஸ்ட் டி20 லெவன் (ஐசிசி கணிப்பு):
ஜாஸ் பட்லர், முகமது ரிஸ்வான் (வி.கீ), பாபர் அசாம் (கேப்டன்) எய்டன் மார்க்கரம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், ஷாம்ஸி, ஜோஸ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, முஸ்தபிசுர் ரஹ்மான், ஷாஹீன் அப்ரீதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்