ஆப்நகரம்

கிரிகெட்டின் கதாநாயகன் சச்சின் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த நாள் இன்று.!

என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினத்தில்தான் சர்வதச கிரிக்கெட்போட்யில் அறிமுகமானார்.

TNN 15 Nov 2017, 10:52 am
என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினத்தில்தான் சர்வதச கிரிக்கெட்போட்யில் அறிமுகமானார்.
Samayam Tamil november 15 is the first day sachin tendulkar enter in to cricket
கிரிகெட்டின் கதாநாயகன் சச்சின் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த நாள் இன்று.!


நவம்பர் 15 , 1989 இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைப்பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த சமயத்தில் தான், 16 வயது இளைஞன் இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்குகிறான் . இந்த இளைஞன் பின்னாளில் கிரிகெட்டில் இவ்வளவு பெரிய சாதனை படைப்பான் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . முதல் போட்டி 24 பந்துகளை சந்தித்து 2பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கிறான். அந்த இளைஞன் தான் இன்று இந்திய இளைஞ்ர்களின் கிரிக்கெட் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கர்.

இமாலய சாதனை.!

வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 15, 921 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்18, 466 ரன்கள் குவித்தது தனி சாதனை. கிரிக்கெட் வராலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர்,சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 30, 000 ரனக்ள் குவித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

இந்திய அரசின் அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்பஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்,
இந்த அரும்பெரும் சாதனைகளை படைத்த சச்சின், நவம்பர் 13, 2013 யில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்