ஆப்நகரம்

தனி ஒருவன் ‘கோலி’ போராட்டம் வீண்: நியூசி., அசத்தல் வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி -20 போட்டியில், நியூசிலாந்து அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

TOI Sports 4 Nov 2017, 10:30 pm
ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி -20 போட்டியில், நியூசிலாந்து அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Samayam Tamil nz beat ind by 40 runs in second t20 in rajkot
தனி ஒருவன் ‘கோலி’ போராட்டம் வீண்: நியூசி., அசத்தல் வெற்றி!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்டில் நடந்தது.

இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. முன்ரோ (109), புரூஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (5), தவான் (1) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (23) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

கோலி போராட்டம்:
பாண்டியா (1) சோதி சுழலில் திக்கு முக்கு தெரியாமல் சொதப்பலாக போல்டானார். இதையடுத்து இந்திய கேப்டன் கோலி, தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்முனையில் பந்துகளை தோனி வீணடிக்க, இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது.

இந்நிலையில் கோலியும் (65) அவுட்டாக இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுக்க நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை நியூசிலாந்து அணி, 1-1 என சமன் செய்தது. இரு அணிகள் மோதும் 3வது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்