ஆப்நகரம்

வரலாற்றில் இன்று: கடைசி ஓவரில் 5 விக்கெட்கள்…ஆஸியை பாகிஸ்தான் கதறவிட்ட தினம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஓவரில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியது.

Samayam Tamil 7 May 2021, 3:54 pm
2010ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி உலகக் கோப்பை டி20 தொடரின் 6ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
Samayam Tamil ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்


இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோர் ஓபனர்களாக களமிறங்கினர். வார்னர் 18 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து மைக்கேல் கிளார்க்கும் 2 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து டேவிட் ஹசி, வாட்சன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

வாட்சன் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். அதேபோல், ஹசி 29 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய அணி சுலபமாக 200 ரன்களை கடந்துவிடும் என கருதப்பட்டது. 19 ஓவர்கள் முடிவில் அந்த அணி 191/5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கடைசி ஓவரை வீச 18 வயதே ஆன முகமது அமிர் வந்தார். அந்த ஓவரில் (W, W, W, W, 0, W) வீசப்பட்ட 6 பந்துகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. அதில் 2 ரன்அவுட்களும் அடங்கும்.

இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மிஸ்பா உல் ஹக் 41 (31) ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொதப்பியதால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டும் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில் ஆஸி வெற்றிபெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் செய்த சம்பவம்தான் அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற பிறகு, இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் சந்தித்தன. இதிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்