ஆப்நகரம்

வரலாற்றில் இன்று: 28 வருட காத்திருப்புக்கு முடிவு…உலகக் கோப்பையை தட்டித்தூக்கிய தினம்!

28 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பை வென்று அசத்தியது.

Samayam Tamil 2 Apr 2021, 7:12 am
2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைத் தட்டித்தூக்கி சாதனைப் படைத்தது.
Samayam Tamil இந்திய அணி


இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் களமிறங்கி 50 ஓவர்கள் முடிவில் 276/4 ரன்கள் குவித்தது. முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தனே 103* (88) ரன்கள் குவித்து, ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் விரேந்திர சேவாக் (0), சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். நாடே அதிர்ச்சி கலந்த சோகத்தில் இருந்தது. அடுத்து கவுதம் கம்பீர், விராட் கோலி (35) இருவரும் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதனால், இந்திய அணிக்கு ஓரளவுக்கு அழுத்தங்கள் நீங்கியது. தொடர்ந்து கம்பீர், மகேந்திரசிங் தோனி 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.

சிறப்பாக விளையாடி வந்த கம்பீர் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் 42ஆவது ஓவரின்போது 97 (122) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தோனி 91 (79) ரன்கள் விளாசி கடைசிவரைக் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்