ஆப்நகரம்

வரலாற்றில் இன்று: ‘கையில் தையல்’ பிடிவாதமாகக் களமிறங்கிய கோலி: மெகா சாதனை படைத்து அசத்தல்!

கையில் தையலுடன் களமிறங்கிய விராட் கோலி மெகா சாதனை படைத்து அசத்தினார்.

Samayam Tamil 18 May 2021, 3:21 pm
2016ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 9ஆவது சீசன் 50ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
Samayam Tamil விராட் கோலி


ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு, கடைசியாக நடைபெற்ற போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை பெரிதாக இருந்ததால் 5 தையல்கள் வரை கையில் போடப்பட்டது. இதனால், அடுத்த போட்டியில் இவர் களமிறங்க வாய்ப்பில்லை தகவல் வெளியானது. ஆனால், விராட் கோலியோ காயம் பெரிய வலியை ஏற்படுத்தவில்லை, இதனால் அடுத்த போட்டியில் களமிறங்குவேன் எனத் தெரிவித்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான களமிறங்குவதற்கு முன்புவரை விராட் கோலி அந்த சீசனில் மட்டும் மூன்று சதங்கள் விளாசியிருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் கையில் தையலுடன் களமிறங்கியதால் ஒட்டுமொத்த பார்வையும் விராட் கோலி மீது மட்டுமே இருந்தது.

இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக இரவு 9:30 மணியளவில்தான் டாஸ் போடப்பட்டது. இதனால், போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

ஆர்சிபி அணியில் ஓபனர்களாக கிறிஸ் கெய்ல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். அதிரடி சரவெடியாய் வெடித்த இருவரும் தாறுமாறாக ரன் மழை பொழிந்தனர். கெய்ல் 32 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். கையில் தையல் போட்டும் சதம் விளாசி அசத்திய கோலிக்கு உலக அளவில் பாராட்டு குவிந்தது. இந்த சதம் மூலம் 9ஆவது சீசனில் தனது 4ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து, வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

ஆர்சிபி அணி 15 ஓவர்கள் முடிவில் 211/3 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் அணி வெறும் 120/9 ரன்களை மட்டும் அடித்து 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. யுஜ்வேந்திர சாஹல் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்