ஆப்நகரம்

Ravi Shastri: மொதோ தோனி உடம்பு ஒத்துழைக்குதான்னு பாக்கலாம்: பேக் அடிச்ச ரவி சாஸ்திரி!

முன்னாள் கேப்டன் தோனி அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திடீரென பல்டியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஆமைவேக பேட்டிங் காரணமாக எழுந்த விமர்சனத்துக்கு பின் தற்போதுவரை தானாக ஓய்வில் உள்ள தோனி, சர்வதேச ஓய்வு விஷயத்தில் விடாப்படியாக அடம் பிடித்து வருகிறார். மறுபுறம் இந்திய தேர்வுக்குழுவும் தோனியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

Samayam Tamil 15 Dec 2019, 10:08 am

Samayam Tamil only ms dhoni can answer this question says team india coach ravi shastri
Ravi Shastri: மொதோ தோனி உடம்பு ஒத்துழைக்குதான்னு பாக்கலாம்: பேக் அடிச்ச ரவி சாஸ்திரி!

​ஐபிஎல் வரை

இதுவரை தோனி விஷயத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவாகவே பேசி வந்த நிலையில் தற்போது அப்போது பார்க்கலாம் என பேசியுள்ளார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,“தோனி தற்போது எடுத்துள்ள ஓய்வு சிறப்பானது. ஆனால் அவர் மீண்டும் விளையாடத்துவங்கும் போது தான் சர்வதேச தேர்வு குறித்த விமர்சனத்துக்கு பதில் சொல்ல முடியும்.

உடல் ஒத்துழைப்பு

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். டி-20 கிரிக்கெட் அவருக்கு ஒரு வாய்ப்பு தான். ஒருநாள் கிரிக்கெட் தான் அவருக்கு மிகப்பொறுத்தமானது. ஆனால் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தோனியின் உடல் ஒத்துழைக்குமா என தோனி ஒருவர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.

இதெல்லாம் சிக்கல் இல்லை

மற்றபடி தோனி விஷயத்தில் வேறு எந்த சிக்கலும் இல்லை. தற்போது நல்ல ஓய்வில் உள்ளதால் அவர் மனதளவில் தயாராகவே இருப்பார். மீண்டும் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டால், அதற்கு சரியான தருணம் தான் இது. மீண்டும் பார்முக்கு வருவது தோனி கையில் மட்டும் தான் உள்ளது. அதற்கு ஐபில் மிகச்சிறந்த தளம்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்