ஆப்நகரம்

இங்கிலாந்து கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பாகிஸ்தான்: சொந்த மண்ணில் சொதப்பிய சோகம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு சுருண்டது.

TOI Sports 14 Jun 2017, 6:43 pm
கார்டிப்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு சுருண்டது.
Samayam Tamil pak need 212 to win against eng in icc champions trophy
இங்கிலாந்து கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பாகிஸ்தான்: சொந்த மண்ணில் சொதப்பிய சோகம்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

கார்டிப்பில் நடக்கும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஹேல்ஸ் (13) ஏமாற்றினார். இதன் பின் வந்த ரூட் (46), பேரிஸ்டோவ் (43) ஆகியோர் நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை.

தொடர்ந்து ஆமை வேகத்தில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு மார்கன் (33), ஸ்டோக்ஸ் (34), பட்லர் (4), மெஹமது அலி (11), ரசித் (7), பிளங்கிட் (9) என வரிசையாக நடையைகட்ட இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி, அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். ஜுனைத் கான், அறிமுக வீரர் ரூமென் ராயிஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்