ஆப்நகரம்

தென் ஆப்ரிக்காவை வெளுத்துக் கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!

மழை காரணமாக தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

TNN 8 Jun 2017, 12:32 am
பர்மிங்ஹாம்: மழை காரணமாக தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil pakistan ahead of dl as rain arrives
தென் ஆப்ரிக்காவை வெளுத்துக் கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!


மினி உலகக் கோப்பை இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. அதில் பர்மிங்ஹாமில் இன்று நடைபெற்று வரும் போட்டியில், தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி தடுமாறியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மில்லர் 75 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமாக ஆடத் தொடங்கியது. அஷார் அலி 9 ரன்களிலும், ஃபக்தர் 31 ரன்களிலும், ஹபீஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பாபர் 31 ரன்களுடனும், மாலிக் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆட்டத்தை தீர்மானிக்க மழை நிற்பதற்காக நடுவர்கள் காத்திருக்கின்றனர்.

Pakistan ahead of DL as rain arrives.

அடுத்த செய்தி

டிரெண்டிங்