ஆப்நகரம்

“இனிமேலாவது பாகிஸ்தான் வாருங்கள்” : கிரிக்கெட் அணியின் கேப்டன் உருக்கமான வேண்டுகோள்!

இனிமேலாவது மற்ற அணியினர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரவேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

TOI Contributor 19 Jun 2017, 9:22 am
இனிமேலாவது மற்ற அணியினர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரவேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil pakistan captain sarfraz request other team players to come pakistan
“இனிமேலாவது பாகிஸ்தான் வாருங்கள்” : கிரிக்கெட் அணியின் கேப்டன் உருக்கமான வேண்டுகோள்!


இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. வலுவான தொடக்கத்துடன் விளையாட தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 338 ரன்கள் குவித்தது. 339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் விறுவிறுவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவரையும் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆக்கிவிட இந்திய அணி 30.3 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

வெற்றிக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், இந்த வெற்றி நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வெற்றி. இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இனிமேலாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சர்ஃபராஸ் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்