ஆப்நகரம்

இந்தியா தான் வெற்றி பெறும் ... அடித்து சொல்லும் பாகிஸ்தான் தீவிர ரசிகர்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணிக்கு தான் நான் ஆதரவு தருவேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ‘சாச்சா சிகாகோ’ தெரிவித்துள்ளார்.

TOI Sports 31 May 2017, 1:15 pm
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணிக்கு தான் நான் ஆதரவு தருவேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ‘சாச்சா சிகாகோ’ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pakistan cricket fan chacha chicago turns india supporter
இந்தியா தான் வெற்றி பெறும் ... அடித்து சொல்லும் பாகிஸ்தான் தீவிர ரசிகர்


விளையாட்டு வீரரை பல ரசிகர்களுக்கு பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சச்சினின் தீவிர பக்தராக சுதிர் குமார் சவுதிரி, தோனியின் தீவிர ரசிகர் ராம் பாபு ஆகியோர் உள்ளனர். இவர்கள் இந்திய அணி எங்கு விளையாடினாலும், உடல் முழுவதும் தேசிய கொடி நிறத்தை பூசிக்கொண்டு சச்சின், தோனியின் பெயரை உடலில் எழுதி இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பது வழக்கம்.

இந்த வகையில் சிகாகோவை அடிப்படையாக் கொண்ட ‘சாச்சா சிகாகோ’ என்ற முகமது பசீர். இவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் பாகிஸ்தான் அணி எங்கு விளையாடினாலும் அங்கு சென்று ஆதவு தெரிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பாகிஸ்தான் அணிக்கு என் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.



சாச்சா சிகாகோ கூறியுள்ளதாவது:
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணிக்கு தான் நான் ஆதரவு தரப்போகின்றேன். நான் இன்னும் பாகிஸ்தான் அணியை நேசிக்கின்றேன். ஆனால் அதை விட இந்திய அணியை அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றேன்.

முன்னர் எல்லாம் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். ஆனால் தற்போது இந்தியா வெற்றி பெற வேண்டும் என எண்ணுகின்றேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்