ஆப்நகரம்

பவுண்சர் தாக்கி மற்றொரு இளம் வீரர் மரணம்!

பவுண்சர் தாக்கி பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் ஜூபைர் அஹமது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Sports 16 Aug 2017, 3:09 pm
லாகூர்: பவுண்சர் தாக்கி பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் ஜூபைர் அஹமது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pakistan cricketer zubair ahmed dies after eing struck by bouncer
பவுண்சர் தாக்கி மற்றொரு இளம் வீரர் மரணம்!


பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் ஜூபைர் அஹமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 4 லிஸ்ட்-ஏ போட்டிகளிலும், உள்ளூர் டி-20 அணியான குயிட்டா பியர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

இவர் பாகிஸ்தானின் சுதந்திரதின நாளான நேற்று முன் தினம் (ஆகஸ்ட்-14) நடந்த உள்ளூர் போட்டியில் விளையாடியுள்ளார். அதில் ஹெல்மெட் அணியில் அஹமது விளையாடியுள்ளார். அப்போது பவுலர் வீசிய பவுண்சர் அஹமதின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து அஹமது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tragic death of Zubair Ahmed is another reminder that safety gear i.e. helmet must be worn at all times. Our sympathies with Zubair's family pic.twitter.com/ZNmWDYaT5w — PCB Official (@TheRealPCB) August 16, 2017 இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்குள்ளேயே நடந்த இண்டர் ஸ்குவாடு பயிற்சி போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னருக்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

ஆனால் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் இளம் கிரிக்கெட் வீரர் பில் ஹியுஸ் (27 நவம்பர் 2014) பவுண்டர் தாக்கியதில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இதன்பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி ) கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாகிஸ்தானின் மற்றொரு இளம் வீரரின் மரணம் கிரிக்கெட் வீரர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்