ஆப்நகரம்

திடீரென ‘டெஸ்ட்’ கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன பாக்., வீரர் முகமது அமீர்!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jul 2019, 5:08 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் (27 வயது). கடந்த 2009ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீர், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 36 டெஸ்டில் பங்கேற்று 119 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
Samayam Tamil Mohammed Amir


சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், வேகத்தில் மிரட்டிய அமீர் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை பெறுவதாக அமீர் திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதில், “பாகிஸ்தானுக்காக டெஸ்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ஒருநாள், டி20களில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கவுள்ள நிலையில் இளம் வீரரை தயார் செய்ய வேண்டிய நேரம் இது. அதற்காக தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இங்கிலாந்தில் கடந்த 2011ல் நடந்த போட்டிகளின் போது நடந்த ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி 3 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகள் தடைக்கு பின் கடந்த 2016 ஜனவரியில் அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.


தொடர்ந்து 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியில் அமீர் இடம் பிடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்