ஆப்நகரம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் தகுதிபெறுவதே சந்தேகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற உள்ளது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேரடியாக தகுதி பெறுமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

TOI Sports 11 Jan 2017, 10:11 pm
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற உள்ளது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேரடியாக தகுதி பெறுமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
Samayam Tamil pakistan now sets sights on direct qualification for the icc cricket world cup 2019
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் தகுதிபெறுவதே சந்தேகம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பார்ம் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், 2019ல் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறுமா என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமெனில், அணி தரவரிசையில் முதல் 7 இடத்திற்குள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பிடிக்கவில்லையெனில், ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான அணி தகுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும்.



துவங்க இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பார்ம் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது ஒரு நாள் போட்டிக்கான அணியின் தரவரிசையில் 89 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது.

வங்கதேசம் அணி பாகிஸ்தானை விட 3 புள்ளிகள் அதிகமாக 92 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 புள்ளிகள் குறைவாக 86 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் மற்றும் மே.இ அணிகள் அடுத்து வரும் ஒரு நாள் போட்டி தொடர்களில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் நேரடி உலகக் கோப்பை கனவு கனவாகிவிடும்.



அதேசமயம் பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை நேரடி போட்டிக்கு தகுதி பெறும்.

எப்படியோ பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும். அப்போது தான் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தை காண முடியும். அதிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனையை தொடர முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்