ஆப்நகரம்

டி - 20யில் இருந்து வெளியேறுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவில் டி-20 கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்தியா வெளிப்படையான அறிக்கை வெளியிடாவிட்டால் அந்தப் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு மிரட்டல் விடுத்துள்ளது.

TOI Contributor 3 Mar 2016, 11:03 pm
இந்தியாவில் டி-20 கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்தியா வெளிப்படையான அறிக்கை வெளியிடாவிட்டால் அந்தப் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு மிரட்டல் விடுத்துள்ளது.
Samayam Tamil pakistan threatens to pull out of world twenty20
டி - 20யில் இருந்து வெளியேறுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே தரம்சாலாவில் மார்ச் 19-ஆம் தேதியன்று டி20 உலக கோப்பை லீக் போட்டி நடக்கவுள்ளது.

இந்நிலையில், இமாசல பிரதேச மாநில முதல்வர் வீர்பத்ர சிங் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தரம்சாலாவில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு மாநில அரசால் பாதுகாப்பு தர இயலாது என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து இன்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹர் கான், ''இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு உரிய பாதுபாப்பு உறுதி அளித்து, அதற்கான அறிக்கையை இந்தியா வெளிப்படையாக வெளியிட வேண்டும். இதுகுறித்து ஐசிசிக்கும் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இறுதி வரை கவனித்து, லெவந்த் அவரிலும் நாங்கள் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறுவோம்'' என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்