ஆப்நகரம்

நான் வேணா பத்தாம் கிளாஸ்... ஆனா என் பொண்ணு என்ன படிச்சிருக்கா தெரியுமா?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா மருத்துவ படிப்படி முடித்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 5:10 pm
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா மருத்துவ படிப்படி முடித்துள்ளார்.
Samayam Tamil sara-sachin


சச்சினுக்கு சாரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர். லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார் 20 வயதான சாரா சச்சின்.

சாரா கல்லூரியில் சேருவதற்கு முன் தன் பள்ளிப்படிப்பை, மும்பையில் உள்ள தொழிலதிபர் திருபாய் அம்பானியின் சர்வதேச பள்ளியில் படித்தார்.

தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளா சாரா, பட்டமளிப்பு விழாவில் தான் பெற்ற பட்டத்துடன் தந்தை சச்சின் மற்றும் தாய் அஞ்சலியுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஞ்சலியும் நானும் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். வெளியே சென்று உலகை வெற்றிகொள், சாரா” என உணர்ச்சி பெருக்க பாராட்டி பதிவிட்டுள்ளார்.



View this post on Instagram I did what?🙊 A post shared by Sara Tendulkar (@saratendulkar) on Sep 6, 2018 at 10:47am PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்