ஆப்நகரம்

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இலங்கை : ராகுல், தவான் அரைசதம்!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்தியாவின் துவக்க வீரர்களான தவான், ராகுல் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

TOI Sports 12 Aug 2017, 12:14 pm
கண்டி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்தியாவின் துவக்க வீரர்களான தவான், ராகுல் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
Samayam Tamil rahul dhawan brings up breezy century stand
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இலங்கை : ராகுல், தவான் அரைசதம்!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் இன்று துவங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு, ராகுல், தவான் ஜோடி துவக்கம் அளித்தது.

இப்போட்டியின் துவக்கம் முதலே இலங்கை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. அந்த அணியின் பீல்டர்கள், ராகுல், தவான் ஆகியோர் தலா ஒரு முறை கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட, இந்த ஜோடி நங்கூரமாக நின்றது.

வாய்ப்பை பயன்படுத்திய ராகுல், தவான் இருவரும் அரைசதம் கடந்தனர். மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் (67), தவான் (64) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்