ஆப்நகரம்

யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் விருப்பம்!

பாலிவுட்டில் விளையாட்டு தொடர்பான படங்கள் வருவது தற்போது டிரெண்டாகி வருகிறது.

TNN 5 Feb 2017, 2:16 pm
கடந்த அக்டோபர் மாதம் ஏய் தில் ஹை முஷ்கில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு தனக்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ranbir kapoor approached to play yuvraj singh in cricketers biopic report
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் விருப்பம்!


பாலிவுட்டில் விளையாட்டு தொடர்பான படங்கள் வருவது தற்போது டிரெண்டாகி வருகிறது. தங்கல், எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி, சுல்தான் ஆகிய படங்கள் இந்த வரிசையில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த 35 வயதான யுவராஜ் சிங் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தார்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் தற்போது பாலிவுட் வட்டாரங்கள் இருந்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது யுவராஜ் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற குழப்பத்தில் பாலிவுட் வட்டாரங்கள் இருக்கின்றனர்.

எனினும், பாலிவுட்டில் முன்னணி ஹீரோவான ரன்பீர் கபூர் யுவராஜ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனக்கு ஆவலாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பாக அவருக்கு எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – நியூசிலாந்து தொடரின் போது என்னுடைய வாழ்க்கையில் ரசிக்கக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது என்னைப் பொறுத்தவரை அக்ஷய் குமார் இதற்கு சரியான நடிகர் என்று கூறியுள்ளார்.

It's an open season for sports movies in Bollywood. Dangal, M.S. Dhoni: The Untold Story, Sultan, etc have done exceedingly well and won accolades. And it's rumoured that groundwork has already started to make a movie based on the life of Yuvraj Singh.

அடுத்த செய்தி

டிரெண்டிங்