ஆப்நகரம்

இடது கையால் இதைச் செய்த ஒரே ஆள் இவர்தான்!

இலங்கை அணியின் ரங்கனா ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

TNN 3 Oct 2017, 5:33 am
இலங்கை அணியின் ரங்கனா ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Samayam Tamil rangana herath becomes 4th fastest bowler to take 400 test wickets
இடது கையால் இதைச் செய்த ஒரே ஆள் இவர்தான்!


சார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹெராத் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அவர், பாகிஸ்தானின் முகமது அப்பாஸை இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய 14 வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இச்சாதனையை படைக்கும் முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இவர்தான்.

84 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஹெராத் 400 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது 400 விக்கெட்டுகளில் 101 விக்கெட்டுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வீழ்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரும் இவரே.

டெஸ்ட் போட்டிகளில் 35 வயதுக்குப் பிறகு அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்