ஆப்நகரம்

என் வாழ்நாளில் தமிழ்நாட்டை மட்டும் மறக்கவே மாட்டேன்: சச்சின் உருக்கம்!

’தமிழக அணிக்கு எதிரான 1999-2000ல் நடந்த ரஞ்சிக்கோப்பை அரையிறுதிபோட்டியை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

TOI Sports 9 Nov 2017, 3:41 pm
மும்பை: ’தமிழக அணிக்கு எதிரான 1999-2000ல் நடந்த ரஞ்சிக்கோப்பை அரையிறுதிபோட்டியை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ranji game against tn the best says tendulkar
என் வாழ்நாளில் தமிழ்நாட்டை மட்டும் மறக்கவே மாட்டேன்: சச்சின் உருக்கம்!


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவர் சர்வதேச அரங்கில் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிகெட் தொடர் நடக்கிறது.

இதில் இன்றைய போட்டியில் பங்கேற்கும் மும்பை அணி தனது 500வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொள்கிறது. இதற்கு முன்பாக இந்த சிறப்பான தருணத்தை மேலும் சிறப்பிக்க, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மும்பையைச் சேர்ந்த ஜாம்பவான் சச்சின் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சச்சின் கூறுகையில்,’ தமிழக அணிக்கு எதிரான கடந்த 1999-2000ம் ஆண்டு நடந்த ரஞ்சிக்கோப்பை அரையிறுதியை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. அப்போட்டியில் தமிழக கேப்டன் பதானி, ஆடுகளத்தில் எனது அசைவுகளை கவனித்து பவுலருக்கு முன்னாடி ...முன்னாடி...என தமிழில் தகவல் தெரிவித்தார். ஆனால் போட்டி முடிந்த பின் பதானியை அழைத்து எனக்கு தமிழ் தெரியும் என அவரிடம் தெரிவித்தேன்.’ என்றார்.

Sachin Tendulkar chose the 1999-2000 semifinal against Tamil Nadu as the best he has played in the Ranji Trophy.

அடுத்த செய்தி

டிரெண்டிங்