ஆப்நகரம்

கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகியுள்ளனர், 45 பேர் படுகாயமடைந்தனர்.

Samayam Tamil 20 May 2018, 10:10 am
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகியுள்ளனர், 45 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil afgan cricket ground blast2


ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வந்தது. நேற்று முன் தினம் இரவு நடந்த போட்டியை ஏராளமானோர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த சப்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் அந்த கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் இதயத்துல்லா ஜாகிர், ஜாலாலாபாத் துணை மேயர் டாக்டர் ந்க்மல் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயமடைந்தனர்.


இரண்டு குண்டு மைதானத்தின் உள்ளேயும், இரண்டு குண்டு வெளியேயும் வெடித்தன. ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர் கரீம் சாதிக் குண்டு வெடிக்கும் போது அந்த மைதானத்தில் தான் இருந்துள்ளார். இருப்பினும் அவர் எந்த காயமுமின்றி தப்பினார்.

இந்த குண்டுவெடிப்பிற்கு நாங்கள் காரணமில்லை என தலீபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்