ஆப்நகரம்

இந்த விஷயத்துல ‘தல’ தோனி கபில் தேவ் மாதிரி... ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உடற்தகுதி விஷயத்தில் கபில்தேவ் போல் உள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jan 2020, 3:39 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது ஆமைவேக பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இதையடுத்து தற்போது வரை தானாக ஓய்வில் உள்ளார் தோனி. இந்நிலையில் தோனியின் எதிர்கால திட்டம் குறித்து அவரிடம் பேசியதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil MS Dhoni


ஐபிஎல் தொடர் குறி
விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவதே தோனியின் முதல் திட்டமாக தெரிகிறது. உடற்தகுதியை பொறுத்தவரையில் தோனி கபில்தேவ் போன்றவர் என ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

கபில்தேவ் போல
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,“தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுதும் உடற்தகுதியில் எவ்வித பிரச்சனையும் சந்திக்காத ஒருவர் என்றால் அது கபில்தேவ் மட்டும் தான். தோனியும் அவரைப்போல தான் உடற்தகுதி விஷயத்தில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் தோனி இன்னும் தாராளமாக இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தகுதியுடன் உள்ளார்.

தனி உரையாடல்
தோனியும் நானும் எதிர்காலம் குறித்து விவாதித்தோம். ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓய்வில்லாமல் விளையாடிய தோனியை மக்கள் மதிக்க வேண்டும். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதேநேரம் தற்போதைய குறி டி-20 கிரிக்கெட்டில் விளையாடுவது தான். தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது அவரின் உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்கலாம்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்