ஆப்நகரம்

மொதல்ல.... இவன துரத்துங்க.... ரவி சாஸ்திரி மேல் கடுப்பான ரசிகர்கள்!

லார்ட்ஸ் டெஸ்டின் மகா மட்டமான தோல்விக்கு இந்திய ரசிகர்கள் ரவி சாஸ்திரியை சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Samayam Tamil 13 Aug 2018, 4:32 pm
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டின் மகா மட்டமான தோல்விக்கு இந்திய ரசிகர்கள் ரவி சாஸ்திரியை சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Samayam Tamil 1534132602-AP_18219381707632


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கேப்டனாக கோலி படு மோசமான தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இந்திய ரசிகர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்