ஆப்நகரம்

மற்ற கேப்டன்கள் எல்லாம் தோனிக்குக் கீழே தான்: ரவி சாஸ்திரி

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் தோனி மிகவும் சிறந்தவர் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 10 Jan 2017, 11:14 am
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் தோனி மிகவும் சிறந்தவர் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ravi shastri snubs sourav ganguly hails ms dhoni
மற்ற கேப்டன்கள் எல்லாம் தோனிக்குக் கீழே தான்: ரவி சாஸ்திரி


மகேந்திர சிங் தோனி தனது ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பைத் துறந்தது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி, “நான் இதுவரை பார்த்ததில் தோனிதான் சிறந்த கேப்டன். அவருக்கு நான் சல்யூட் அடிக்கிறேன்” என்றார். மேலும், “அவருடைய தலைமையின் கீழ் பல வெற்றிகளைப் பெற்று உள்ளோம். அவர் பெற்றுத்தந்த அளவிற்கு வெற்றிகளை வேறு எவரின் தலைமையிலும் நாம் பெற்றதில்லை. இந்தியாவின் கேப்டனாக பல உச்சங்களை வெகு விரைவில் அடைந்தவர் தோனி. அவரை யாராலும் நெருங்க முடியாது. கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது அவரது சொந்த முடிவு” என்று தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது முக்கியமான முடிவு என்ற ரவி சாஸ்திரி, “விராத் கோலிக்கான நேரம். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கும் முன் தனது அணியை அவர் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தோனியைப் பொறுத்தவரை அவர் தனது தலைமையில் நிரூபிப்பதற்கு எதுவும் மிச்சமில்லை. கேப்டனாக எல்லாவற்றையும் அவர் சாதித்துவிட்டார்.” என்று கூறினார்.

தோனியை நம்பர் ஒன் கேப்டனாகக் கருதும் ரவி சாஸ்திரி அவருக்கு அடுத்து கபில் தேவ், அஜித் வடேகர், பட்டோடி, சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயரையும் சிறந்த கேப்டன்கள் வரிசையில் வைக்கிறார். ஆனால், தோனிக்கு முன் இந்தியாவின் கேப்டனாக பல சாதனைகள் படைத்த கங்குலியைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ரவி சாஸ்திரி மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்