ஆப்நகரம்

மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என பிசிசிஐ., தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 6:58 pm
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளவர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil Kapil Dev


வெற்றி சதவீதம்:
ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியுள்ளது.


மூவர் குழு:
இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு இன்று நடக்கிறது. இந்த நேர்காணலில், மைக் ஹசன், டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், பில் சிம்மன்ஸ், ரவி சாஸ்திரி என 6 பேர் பங்கேற்றனர்.

முன்னாள் கேப்டன் கபில் தேவ், அனுஸ்மான் கேக்வாத், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூவர் குழு இந்த நேர்காணலை நடத்தினர்.

இந்த நேர்காணலுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, வரும் 2021 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ரவி சாஸ்திரி தொடர்வார் என பிசிசிஐ , அறிவிக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்