ஆப்நகரம்

சிக்சர் மழை பொழிந்த டிவிலியர்ஸ்: தனி ஒருவனாக கடைசி வரை போராட்டம்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தனிஒருவனாக போராடி சிக்சர் மழை பொழிய, அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

TOI Sports 10 Apr 2017, 9:39 pm
இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தனிஒருவனாக போராடி சிக்சர் மழை பொழிய, அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil rcb gets 148 runs in 20 overs against kxip
சிக்சர் மழை பொழிந்த டிவிலியர்ஸ்: தனி ஒருவனாக கடைசி வரை போராட்டம்!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நடக்கும் எட்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் வாட்சன், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதில் பெங்களூரு அணியில் ராட்ஷசன் கெய்லுக்கு பதிலாக, டிவிலியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

வாட்சன் வீண்:
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் வாட்சன் (1), விஷ்ணு (7) சொதப்பல் துவக்கம் அளித்தனர். பின் வந்த கேதர் ஜாதவ் (1), மந்தீப் சிங் (28) என வரிசையாக நடையை கட்ட, பெங்களூரு அணி ரன்கள் சேர்க்க தட்டுத்தடுமாறியது.

டிவிலியர்ஸ் ருத்ரதாண்டவம்:
ஒருபுறம் விக்கெட் விழ்ச்சி தொடர, மறுமுனையில் தனி ஒருவனாக டிவிலியர்ஸ் சிக்சர் மழை பொழிந்தார். கடைசி வரை இவர் தனது அதிரடியை தொடர், பெங்களூரு அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (89, 3 பவுண்டரி, 9 சிக்சர்), பின்னி (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்