ஆப்நகரம்

இதைவிட கேவலமாக அவுட்டாக முடியாது : தோல்வியில் சாதனை படைத்த பெங்களூரு

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி படுகேவலமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியடைந்தது.

TOI Sports 23 Apr 2017, 11:34 pm
கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி படுகேவலமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியடைந்தது.
Samayam Tamil rcb in danger of falling for record low
இதைவிட கேவலமாக அவுட்டாக முடியாது : தோல்வியில் சாதனை படைத்த பெங்களூரு


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 27 போட்டியில் பெங்களூரு அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே இடையே கொல்கத்தாவில் நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கி கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரி விளாசி அதிரடி காட்டி 34 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் 19.3 ஓவரில் 131 ரனகள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுலப இலக்கு :
132 என்ற சுலப இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு பெரிய ஜாம்பவான்கள் எளிதில் போட்டியை முடித்து விடுவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்படியும் அவுட்டாக முடியுமா என்பதைப் போல பெங்களூருவின் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன் அடிக்காமல் படுகேவலமாக அவுட்டாகி 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.



அதிகபட்சமே 9 ரன்:
கெயில் 7, கோலி 0, மந்தீப் சிங் 1, டிவில்லியர்ஸ் 8, கேதார் ஜாதவ் 9, பின்னி 8, நெகி 2, பத்ரி 0, மில்ஸ் 2, சஹால் 0 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அரவிந்த் மட்டும் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
கொல்கத்தாவின் கூல்டர் நைல் 3 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும், கிறிஸ் ஓக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்