ஆப்நகரம்

MS Dhoni: ‘தல’ தோனி சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘சுள்ளான்’ பந்த்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தகர்பார் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 5 Dec 2019, 2:55 pm
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தகர்பார் என எதி்ர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil rishabh pant looks to surpass ms dhonis record in t20is
MS Dhoni: ‘தல’ தோனி சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘சுள்ளான்’ பந்த்!


கடும் விமர்சனம்

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தோனி இடத்தை பிடித்தது முதல் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது.


இந்த பாட்ஷா முன்னாடி பும்ராலாம் வெறும் பட்சா தான்: முன்னாள் பாக் வீரர் அப்துல் ரசாக்!

என்ன சாதனை?

இதுவரை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனி உள்ளார். இவர் கடந்த 2009- 2017 வரை 7 போட்டியில் பங்கேற்றுள்ள தோனி மொத்தமாக 5 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். அதில் 3 கேட்ச் 2 ஸ்டெம்ப்பிங் அடங்கும்.


சிக்சரில் இந்த இமாலய மைல்கல்லை செய்ய காத்திருக்கும் ‘டான்’ ரோஹித்!

பந்த் எவ்வளவு

இதே போல இளம் ரிஷப் பந்த் கடந்த 2017-2019 வரை 7 போட்டியில் விளையாடி, மொத்தமாக 3 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். அதில் 3 கேட்சுகள் அடங்கும். இதற்கிடையில் நாளை துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் தோனியின் சாதனையை பந்த் முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


சும்மா கிழி... நான்தான்டா நம்பர் ஒண்ணு... இனிமேதான் என் தர்பாரு: கெத்து காட்டும் ‘கிங்’ கோலி!

யார் யார்?

இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தினேஷ் ராம்டின் (5 விக்கெட்), பிளட்சர் (3 விக்கெட்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (3 விக்கெட்) ஆகியோர் இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். இதற்கிடையில் வங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஆமைவேக பேட்டிங் காரணமாக பந்த் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்