ஆப்நகரம்

வால் ஆடாததால் பரிதாபமாக தவித்த புனே : பெங்களூருக்கு 162 ரன்கள் இலக்கு

பெங்களூரு அணியின் சிறப்பான பவுலிங்கில் சிக்கி தவித்த, புனே அணி 161 ரன்கள் மட்டும் எடுத்து பரிதவித்தது.

TOI Sports 16 Apr 2017, 9:52 pm
பெங்களூரு : பெங்களூரு அணியின் சிறப்பான பவுலிங்கில் சிக்கி தவித்த, புனே அணி 161 ரன்கள் மட்டும் எடுத்து பரிதவித்தது.
Samayam Tamil rising pune collapse after quick start rcb need 162
வால் ஆடாததால் பரிதாபமாக தவித்த புனே : பெங்களூருக்கு 162 ரன்கள் இலக்கு


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 17 வது போட்டி பெங்களூரு - புனே அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய புனே அணியின் ரஹானே 30, திருப்பதி 31 ரன்கள் என சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்மித் 27, தோனி 28 ரன்கள் என நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்மித், தோனி அவுட்டான பின் வந்த பென் ஸ்டோக் 2, கிறிஸ்டியன் 1, தாகூர் 1 என அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர்.

பின் வரிசையில் இருந்த மனோஜ் திவாரி மட்டும் 11 பந்தில் 27 ரன்கள் எடுத்து அசத்தியதால், 130 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தவித்த புனே அணி, 161 என்ற கெளரவமான ரன் எடுக்க வழிவகுத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்