ஆப்நகரம்

எதிர்பாக்கலேல ரோகித் சர்மா மறுபடியும் அடிப்பார்னு: ஏமாந்து போன இலங்கை வீரர்கள்!

இலங்கை பவுலர்களின் பந்துகளை ரோகித் மற்றும் ராகுல் இருவரும் 4 பக்கமும் பறக்கவிட்டனர்.

TNN 22 Dec 2017, 9:03 pm
இலங்கை பவுலர்களின் பந்துகளை ரோகித் மற்றும் ராகுல் இருவரும் 4 பக்கமும் பறக்கவிட்டனர்.
Samayam Tamil rohit beat srilankan bowlers individually
எதிர்பாக்கலேல ரோகித் சர்மா மறுபடியும் அடிப்பார்னு: ஏமாந்து போன இலங்கை வீரர்கள்!


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இதில், இரு தொடரையும் இழந்த இலங்கை அணி தற்போது 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து தற்போது 2வது டி20 போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

Watch out! Cricket balls are lying in the stands, in the 2nd tier. This pair is on fire #TeamIndia #INDvSL pic.twitter.com/ZNTC8IY4lB — BCCI (@BCCI) December 22, 2017 மறுவாழ்வு பெற்ற கே.எல் ராகுல்:

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தொடர்ந்து சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசினர். இதில், கே.எல். ராகுல் 6 ரன்கள் எடுத்திருந்த போது மேத்யூஸ் ஓவரில் கொடுத்த எளிதான கேட்ச்சை சமரவிக்ரமா தவறவிட்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்து பவுண்டரிகளாக விளாசினார். இதற்கிடையில் கேப்டன் சர்மா பந்து வீச வரும் இலங்கை பவுலர்கள் ஒவ்வொருவரையும், வெளு வெளு என்று வெளுத்து வாங்கினார். இதில், ஓவர் போட முடியாமல் கூட மேத்யூஸ் வெளியேறினார் என்று கூட சொல்லலாம். ஆனால், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்த 15, 16, 20, 17 ரன்கள் என்று இருவரும் மாறி மாறி விளாசினர். இதுவரையில் 7 பவுலர்கள் வரை பந்துவீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்