ஆப்நகரம்

தென் ஆப்ரிக்காவுக்கு மரண பயத்தை காட்டிய மாயங்க், ரோஹித்....: பல சாதனை தகர்த்து மிரட்டல்!

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்த இந்திய துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் பல சாதனைகளை உடைத்தனர்.

Samayam Tamil 3 Oct 2019, 12:51 pm
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதன் இரண்டாவது நாள், உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு, 324 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
Samayam Tamil Rohit Sharma - Mayank Agarwal 1


சூப்பர் ஜோடி...
இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த சேவாக்- காம்பீர் ஜோடியின் சாதனையை தகர்த்தது.

‘டபுள் செஞ்சுரியை’ தவறவிட்ட ரோஹித், : ஆதிக்கத்தை தொடரும் இந்திய அணி: கண்ணீர் வராத குறையா கதறும் பவுலர்கள்!

3வது ஜோடி..
இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காக 300 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமை பெற்றது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி:
317 மாயங்க் அகர்வால் - ரோஹித் ஷர்மா, 2019/20 *
218 சேவாக் - காம்பீர் , 2004/05
213 சேவாக் - வாசிம் ஜாபர் 2007/08

மிரட்டிய மாயங்க் அகர்வால்.... : டெஸ்ட் அரங்கில் 86வது இந்தியராக இணைந்தார்!

* தவிர , தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் ஜோடி பெற்றது.

317 மாயங்க் அகர்வால் - ரோஹித் ஷர்மா, 2019/20 (முதல் விக்கெட்)
268 சேவாக்- திராவிட் 2007/08 (இரண்டாவது விக்கெட்)
259* லட்சுமண் - தோனி 2009/10 (7வது விக்கெட்)
249 சேவாக் - சச்சின் 2009/10 (3வது விக்கெட்)

இந்திய அணிக்காக அதிகரன்கள் சேர்த்த துவக்க வீரர்கள் பட்டியல் :
413 வினோ மான்கட் - ராய், எதிர்- நியூசி ., 1955/56
410 சேவாக் - திராவிட், எதிர்- பாக்., 2005/06
317 மாயங்க் அகர்வால் - ரோஹித் எதிர் - தென் ஆப்ரிக்கா, 2019/20

அடுத்த செய்தி

டிரெண்டிங்