ஆப்நகரம்

பாட்னர்ஷிப்பில் பட்டைய கிளப்பும் ‘டான்’ ரோஹித் , ‘கிங்’ கோலி ஜோடி!

பெங்களுரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஜோடி பாட்னர்ஷிப்பில் சாதனை படைத்தது.

Samayam Tamil 19 Jan 2020, 8:19 pm
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களுருவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
Samayam Tamil Kohli - Rohit


ஸ்மித் மிரட்டல்
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (131) சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

புது சாதனை
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி, ரோஹித் ஜோடி 18ஆவது முறையாக எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியது. இதன் மூலம் எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்களுக்கு மேல் அதிக முறை சேர்த்த ஜோடிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்பட்டியலில் முன்னாள் இந்திய வீரர்களான சச்சின் - கங்குலி ஜோடி (26 முறை) முதலிடத்தில் உள்ளனர். இலங்கையின் தில்ஷன் - சங்ககரா ஜோடி (20 முறை) இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்