ஆப்நகரம்

ஜெயசூர்யாவின் உலக சாதனையை சுக்குநூறாக நொறுக்கிய டான் ரோஹித்!

கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவின் உலக சாதனையை தகர்த்தார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் நடக்கிறது. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பூரன் (89), போலார்டு (74) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

Samayam Tamil 22 Dec 2019, 7:25 pm

Samayam Tamil rohit sharma breaks 22 year old record in third odi against west indies
ஜெயசூர்யாவின் உலக சாதனையை சுக்குநூறாக நொறுக்கிய டான் ரோஹித்!

ரோஹித் மைல்கல்

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ராகுல், ரோஹித் ஷர்மா துவக்கம் அளித்தனர். வழக்கம் போல சிறப்பான துவக்கம் அளித்த இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பதம் பார்த்தனர். ரோஹித் ஷர்மா அதிரடி காட்டினார். இவர் 9 ரன்கள் எடுத்த போது, அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

22 ஆண்டுக்கு முன்

கடந்த 1997இல் சனத் ஜெயசூர்யா ஒரே ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து 2387 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை இன்று ரோஹித் ஷர்மா காலி செய்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகரன்கள் விளாசிய வீரர்களில் ரோஹித் ஷர்மா, கோலி இடையே அதிக போட்டி நிலவுகிறது.

Twitter-Milestone 🚨 Rohit Sharma surpasses Sanath Jayasu...

​ஹாட்ரிக் அச்சுறுத்தல்

கடந்த 2016 முதல் இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நம்பர்-1 இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்தாண்டு கோலியின் நம்பர்-1 இடத்துக்கு ரோஹித் ஷர்மா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளார்.

சூப்பர் ஜோடி

மேலும் இந்தாண்டில் துவக்க வீரர் ராகுல் உடன் சேர்ந்து ரோஹித் ஷர்மா 5 முறை 100 ரன்களுக்கு மேல் பாட்னஷிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் தவனுக்கு (6 முறை, 2013) அடுப்படியாக ராகுல், ரோஹித் ஷர்மாவின் சிறந்த பாட்னராக அமைந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்