ஆப்நகரம்

ஆஸிக்கு எதிரான கிங் கோலியின் சாதனையை சமன் செஞ்ச டான் ரோஹித்!

பெங்களுரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா , விராட் கோலியின் சாதனையை சமன் செய்து அசத்தினார்.

Samayam Tamil 19 Jan 2020, 8:47 pm
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களுருவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
Samayam Tamil Rohit Sharma


ரோஹித் சதம்
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (131) சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 119 ரன்கள் அடித்து அவுட்டானார். இது ரோஹித் ஷர்மா ஒருநாள் அரங்கில் அடித்த 29ஆவது சதமாக அமைந்தது.


பாண்டிங் முன்னிலை
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா நான்காவது இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (49 சதம்) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி (43) இரண்டாவது இடத்திலும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (30) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்
சச்சின் (இந்தியா) - 49 சதங்கள்
விராட் கோலி (இந்தியா) - 43 சதங்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸி) - 30 சதங்கள்
ரோஹித் ஷர்மா (இந்தியா) - 29 சதங்கள்
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 28 சதங்கள்
ஹசிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா) - 27 சதங்கள்


கோலி சாதனை
தவிர, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ரோஹித் ஷர்மா அடித்த 8ஆவது சதமாக அமைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியின் (8 சதங்கள்) சாதனையை ரோஹித் சமன் செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (9 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.


மேலும் ஒரே எதிரணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாவது இடத்தை சச்சின் (8 சதங்கள், எதிர்- இலங்கை) விராட் கோலி (8 சதங்கள், எதிர்- இலங்கை, ஆஸி) ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார்.

ஒரே எதிரணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்
சச்சின் (இந்தியா) - 9 சதங்கள் (எதிர்- ஆஸி)
விராட் கோலி (இந்தியா) - 9 சதங்கள் (எதிர்- வெஸ்ட் இண்டீஸ்)
சச்சின் (இந்தியா) - 8 சதங்கள் (எதிர்- இலங்கை)
விராட் கோலி (இந்தியா) - 8 சதங்கள் (எதிர்- இலங்கை)
விராட் கோலி (இந்தியா) - 8 சதங்கள் (எதிர்- ஆஸி)
ரோஹித் ஷர்மா (இந்தியா) - 8 சதங்கள் (எதிர்- ஆஸி)

அடுத்த செய்தி

டிரெண்டிங்