ஆப்நகரம்

India vs South Africa: ‘டான்’ ரோஹித் தெறி மாஸ் சதம்... : திக்கித்திணறும் தென் ஆப்ரிக்க பவுலர்கள்!

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா சதம் அடித்து மிரட்ட இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2019, 2:14 pm
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில்
Samayam Tamil Rohit Sharma 1

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ரோஹித் மிரட்டல்...
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர். தென் ஆப்ரிக்க பவுலர்களை எளிதாக இந்த ஜோடி சமாளித்தது.

ஆலோசனை குழுவில் இருந்து கபில் தேவ் ராஜினாமா...? : ரவி சாஸ்திரி கதி என்ன?

முதல் டெஸ்டின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (52), மாய்ங்க் அகர்வால் (39) அவுட்டாகாமல் உள்ளனர்.

தொடர்ந்த ரோஹித்..
உணவு இடைவேளைக்கு பின் ரோஹித் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். சீரான இடைவேளையில் சிக்சர்களாக பறக்கவிட்ட ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார்.

47 ஆண்டுக்கு பின் ‘டான்’ ரோஹித், மாயங்க் அகர்வால் படைத்த விசித்திர சாதனை!

4வது வீரர்..
துவக்க வீரராக டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தவிர, துவக்க வீரராக டெஸ்ட் அரங்கில் சதமடித்த 4வது வீரரானார் ரோஹித் ஷர்மா.

துவக்க வீரராக முதல் இன்னிங்சில் சதமடித்த இந்திய வீரர்கள்
187 ஷிகர் தவன் (எதிர்-ஆஸி., 2012/13)
110 கே.எல்.ராகுல் (எதிர்-ஆஸி.,, 2014/15)
134 பிரித்வீ ஷா (எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2018/19)
115* ரோஹித் ஷர்மா (எதிர்-தென் ஆப்ரிக்கா, 2019/20)


மோசமான வானிலை...
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக, தேனீர் இடைவேளை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் நாள் தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்ச்ல் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்