ஆப்நகரம்

ஜாம்பவான் கவாஸ்கர், சச்சின் பட்டியலில் சேர்ந்த டான் ரோஹித்!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, முன்னாள் வீரர்களான சச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்.

Samayam Tamil 29 Jan 2020, 5:43 pm
ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, முன்னாள் வீரர்களான சச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் நடக்கிறது.
Samayam Tamil rohit sharma joins in the list of sachin tendulkar and sunil gavaskar
ஜாம்பவான் கவாஸ்கர், சச்சின் பட்டியலில் சேர்ந்த டான் ரோஹித்!



ரோஹித் அரைசதம்

இதில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (65) அரைசதம் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரிலும் 15 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 48 ரன்கள் அடித்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

​21ஆவது வீரர்

இதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின், விரேந்திர சேவாக், கவாஸ்கர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இம்மைல்கல்லை எட்டிய 21ஆவது வீரர் என்ற வரலாறு படைத்தார்.

இரண்டாவது இடம்

இந்நிலையில் இம்மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடம் பிடித்தார். ரோஹித் ஷர்மா இம்மைல்கல்லை தனது 219ஆவது இன்னிங்சில் எட்டியுள்ளார். இப்பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (214 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். கிஹாம் கூச் (228), கவாஸ்கர் (233), மாத்யூ ஹேடன் (236), கிரெண்ட்ஜ் (236) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

​சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை எட்டிய துவக்க வீரர்கள்

வீரர் இன்னிங்ஸ்

சச்சின் (இந்தியா) - 214 இன்னிங்ஸ்

ரோஹித் ஷர்மா (இந்தியா) - 219 இன்னிங்ஸ்

கிஹாம் கூச் (இங்கிலாந்து) - 228 இன்னிங்ஸ்

கவாஸ்கர் (இந்தியா) - 233 இன்னிங்ஸ்

மாத்யூ ஹேடன் (ஆஸி) - 236 இன்னிங்ஸ்

கிரெண்ட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) - 236 இன்னிங்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்