ஆப்நகரம்

கங்குலியை மதிக்காத ரோஹித் ஷர்மா: பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு!

ஓய்வு தேவை என்று கங்குலி கூறிய நிலையில், ரோஹித் ஷர்மா ஐபிஎல் போட்டியில் விளையாடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Nov 2020, 8:31 am
ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ளது. தற்போது, மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டால் அது எளிதில் குணமடையாது. அதனால் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்த சில மணி நேரங்களில் ரோஹித் ஷர்மா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இதனால், பிசிசிஐ வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, அவருக்கு இடது கால் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
Samayam Tamil Rohit Sharma


இதனால், அடுத்த நான்கு போட்டிகளில் களமிறங்கவில்லை. கெய்ரன் பொல்லாட்ர் அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இப்போட்டியில் தோற்றாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிந்தும் காயத்திலிருந்த குணமடைந்த ரோஹித் ஷர்மா களமிறங்கினார்.

டாஸ் போடும் போது பேசிய அவர், நான் குணமடைந்துவிட்டேன் எனத் தெரிவித்தார். ஆனால், போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பேசிய கங்குலி, ரோஹித் ஷர்மா முழுமையாக குணமடைந்தாலும், அவருக்கு மீண்டும் அதே இடத்தில் அடிப்பட்டால் காயம் எளிதில் குணமடையாது. அதனால், அவர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கொல்கத்தாவுக்கு துரோகம் செய்த மும்பை: ஹைதராபாத் மெகா வெற்றி!

கங்குலியின் இந்த வேண்டுகோளை ரோஹித் ஷர்மா புறந்தள்ளி களமிறங்கியது தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்திய அணியின் தலைமை மருத்துவர் படேல், பிசிசிஐக்கு ரோஹித் ஷர்மாவின் உடற் தகுதி குறித்து அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில், ரோஹித் ஷர்மா குறைந்தது மூன்று வாரங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், அவர் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனக் கருதிய நிலையில், தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். இதனால், ஏற்படும் விளைவு பின்னாட்களில் தெரியவரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்