ஆப்நகரம்

பெங்களூருக்கு 158 ரன்கள் இலக்கு : புனேவை வீழ்த்தாவிட்டால் அவ்வளவு தான்

புனே : இன்று வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாய சூழலில் புனே அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடி வருகின்றது.

TOI Sports 29 Apr 2017, 6:04 pm
புனே : இன்று வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாய சூழலில் புனே அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடி வருகின்றது.
Samayam Tamil royal challengers bangalore need 158 runs agaist rising pune supergiant
பெங்களூருக்கு 158 ரன்கள் இலக்கு : புனேவை வீழ்த்தாவிட்டால் அவ்வளவு தான்


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 34வது போட்டியில் புனே அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே புனேவில் நடைப்பெற்று வருகிறது. டாஸ்வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய புனே அணியின் தொடக்க வீரர் ரஹானே 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இணைந்த திருப்பதி மற்றும் ஸ்மித் இணை மிக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

திருப்பதி 28 பந்தில் 37 ரன்னும், ஸ்மித் 32 பந்தில் 45 ரன்கள் எடுத்து புனே அணி ரன்னை உயர்த்தினர். பின்னர் வந்த மனோஜ் திவாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35க்கு 44 ரன்கள் எடுத்தார். தோனி 17க்கு 21 ரன்கள் எடுத்தார். புனே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு அணிக்கு வாழ்வா, சாவா என்ற முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டியில், புனே அணியை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே கொல்கத்தா, மும்பை,ஐதராபாத் அணிகள் முதல் 3 இடத்தை பிடித்துள்ளன. மற்ற 5 அணிகளும் 4வது இடத்தை பிடிக்கும் பந்தயத்தில் மோதிவருகின்றன.ஏற்கனவே 9ல் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு. புனே அணி உட்பட அடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றல் மட்டும் முதல் 4 இடங்களில் பெங்களூரு அணி இடம்பெற முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்