ஆப்நகரம்

லேட்டா அடிக்கும் இந்தியா: வலுவான முன்னிலை நோக்கி முன்னேறும் தென் ஆப்ரிக்கா!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய பவுலர்கள் லேட்டாக விக்கெட் கைப்பற்ற, தென் ஆப்ரிக்க அணி 201 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

Samayam Tamil 16 Jan 2018, 3:49 pm
செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய பவுலர்கள் லேட்டாக விக்கெட் கைப்பற்ற, தென் ஆப்ரிக்க அணி 201 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.
Samayam Tamil sa under pressure but lead passes 200
லேட்டா அடிக்கும் இந்தியா: வலுவான முன்னிலை நோக்கி முன்னேறும் தென் ஆப்ரிக்கா!


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் நாள் முதல் இன்னிங்சில் 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து 118 ரன்கள் முன்னிலை பெற்ற போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

எல்கர் அரைசதம்:
இந்நிலையில் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டிவிலியர்ஸ் (80) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. எல்கர் (61) அரைசதம் அடித்து ஷமி வேகத்தில் சிக்கினார்.

பின் வந்த பிளாண்டர், டுபிளசி நிதானமான் ஆட்டத்தை வெளிப்படுத்த, நான்காவது நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து 201 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்