ஆப்நகரம்

இவர் பார்முக்கு திரும்பியே ஆகணும்…அப்போதான் டி20 கோப்பைய வெல்ல முடியும்: முன்னாள் வீரர் கருத்து!

இந்திய இளம் வீரர் பார்முக்கு திரும்பியாக வேண்டும் என முன்னாள் வீரர் ஷாபா கரீம் பேசியுள்ளார்.

Samayam Tamil 13 Jul 2021, 8:06 pm
Samayam Tamil இந்திய அணி
விராட் கோலி, முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில், ஐபிஎலில் சிறப்பாக சோபித்த ருதுராஜ் கெய்க்வாட், சேத்தேன் சகார்யா போன்ற இளம் வீரர்களை உள்ளட்டகிய இந்திய அணி இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்காக:

இலங்கை சென்றுள்ள இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக சோபித்தால் மட்டுமே டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் இலங்கை சென்றுள்ள சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக ஹார்திக் பாண்டியா. இவர் சமீப காலமாகவே பந்துவீசாமல் இருந்து வருகிறார். இலங்கை தொடரிலும் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்தால், டி20 உலகக் கோப்பை அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதனால், இலங்கை தொடரில் ஹார்திக் பாண்டியா பந்துவீச வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த இந்திய அணி முன்னாள் வீரர் ஷாபா கரீம், ஹார்திக் பாண்டியா மட்டும் சிறப்பாகப் பந்துவீசி மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிவிட்டால், இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

“ஹார்திக் பாண்டியா மட்டும் முழு பார்முக்கு திரும்பிவிட்டால், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு இரட்டிப்பாக ஆகிவிடும். அவர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தன்னை நிரூபித்தாக வேண்டும். இலங்கை தொடரில் நிரூபிப்பார் என நினைக்கிறேன். சுழலுக்குச் சாதகமான பிட்சில் இவர் சிரமப்படுவார். இலங்கையிலும் சுழலுக்குச் சாதகமான பிட்ச்தான் இருக்கும். இதனால், இலங்கை தொடர் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும். அனைத்து சவால்களையும் அவர் வென்றாக வேண்டும். அப்போதுதான் டி20 உலகக் கோப்பையை நாம் ஏந்த முடியும்” எனக் கூறினார்.

ஹார்திக் பாண்டியா 2019ஆம் ஆண்டில் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு அவர் பந்துவீசாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்