ஆப்நகரம்

நான் படிக்காதவனாகவே இருக்கேன் - டாக்டர் பட்டம் வேண்டாம் என்ற சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் பட்டம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Sep 2018, 11:29 pm
தன் வாழ்வின் இளமை காலத்தை முழுவதும் கிரிக்கெட்டுக்காக செலவிட்டவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுலர். இவர் சதத்தில் சதம் என கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
Samayam Tamil sachin-tendulkar


கிரிக்கெட் உலகில் அனைவராலும் போற்றக்கூடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சச்சின்.

இவருக்கு மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் 63வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் காரணமாக அந்த பல்கலைக்கழகத்தின் சார்பாக சச்சினுக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்க இருந்தது.

பட்டம் வேண்டாம்:

இந்நிலையில் சச்சின் எனக்கு பட்டம் எல்லாம் வேண்டாம் என தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்மிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி இந்த பல்கலைக் கழகம் கெளரவித்திருந்தது.

முன்னதாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வேண்டாம் என சச்சின் மறுத்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்