ஆப்நகரம்

சச்சினின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்…ஒன்னு பாதிதான் நிறைவேறுச்சு!

சச்சின் டெண்டுல்கர் நிறைவேறாத இரண்டு ஆசைகள் குறித்துத் பேசியுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2021, 8:06 pm
1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் டெண்டுல்கர், சிறு வயது முதலே கிரிக்கெட் மீது நாட்டம் கொண்டவராக இருந்தார். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தை உணர்ந்த அவரின் தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சச்சினை சேர்த்தார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சச்சின் அதன்பின்னர், கிரிக்கெட் மீது மோகம் கொண்டு அதுதான் வாழ்க்கை என வாழத் துவங்கினார். இவரின் ரோல் மாடலாக சுனில் கவாஸ்கர் இருந்தார்.
Samayam Tamil சச்சின் டெண்டுல்கர்


1989ஆம் ஆண்டில் சச்சின் 16 வயதாக இருக்கும்போது, இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக டெஸ்டில் களமிறங்கி அரை சதம் விளாசி அசத்தினார்.

அதன்பிறகு கிட்டதட்ட 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் உலகில் பயணத்து பல மெகா சாதனைகளைப் படித்து கிரிக்கெட்டின் கடவுளாகத் திகழ்கிறார். ஆனால், இவர் முதல் 79 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட விளாசவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமான விஷயம். இருப்பினும் அதன்பிறகு சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

இவர் ஓய்வுபெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழ்கிறார்.

இவர் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்தபோது, கிரிக்கெட் உலகில் நிறைவேறாத இரண்டு ஆசைகள் குறித்துப் பேசினார். “என்னுடைய கிரிக்கெட் ஆசான் சுனில் கவாஸ்கர்தான். அவருடன் இணைந்து விளையாட வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. நான் இந்திய அணிக்கு அறிமுகமாம் முன்னேர அவர் ஓய்வு அறிவித்துவிட்டார். இதனால் அவருடன் இணைந்து விளையாட முடியவில்லை” எனக் கூறினார்.

“அடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டான் பேட்ஸ்மேன் சர் வீவியன் ரிச்சர்ட்ஸுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 2 வருடங்கள் கழித்துத்தான் அவர் ஓய்வு அறிவித்தார். ஆனாலும், அப்போது இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் நடைபெறாத காரணத்தினால் அவருக்கு எதிராக விளையாட முடியாமல் போனது. இருப்பினும் கவுண்டி கிரிக்கெட் தொடரின்போது அவருக்கு எதிராக விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்